Sis. Sarah Navroji Song with lyrics in tamil
இயேசு ஆபிரகாமிலும்...
இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
இயேசு யாக்கோபிலும் பெரியவர்
இயேசு மோசேயிலும் பெரியவர்
இயேசு சாலமோனிலும் பெரியவர்
யோவான் ஸ்நானகனிலும் யோனாவிலும்
தேவ ஆலயத்திலும்
தூய ஓய்வு நாளிலும்
எல்லா தேவர் களிலும் பெரியவர்
நமக்குள் இருப்பவர் நியாயந்தீர்ப்பவர்
நம் இருதயத்திலும் பெரியவர்
இந்த உலகத்தில் இருப்பவனைப்
பார்க்கிலும்
இயேசு பெரியவர் சர்வ வல்லவர்
இயேசு சாத்தானை முறியடித்தவர்
வானம் பூமியின் சகல அதிகாரமும் எனக்கு உண்டென்று இயேசு சொன்னவர்
இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர்
1.எங்கள் எஜமான் இயேசு பெரியவர்
எல்லா ஊழியரிலும் பெரியவர்
இயேசு மரியாளிலும் பெரியவர்
ஏக தேவ மகனே பெரியவர்
எல்லா நாமங்களிலும் மனிதரிலும்
சர்வ சிருஷ்டிகளிலும்
தேவ தூதர்களிலும்
சர்வ லோகங்களிலும் பெரியவர்
பிரதான மேய்ப்பராம்
இயேசு பெரியவர்
பேராயர்களிலும் பெரியவர்
சீயோன் மலை மேல்
அப்போஸ்தலர்கள் நடுவிலே
சர்வ சங்கமாம் தேவ சபையிலே
ஜெய கிறிஸ்து ராஜாவே பெரியவர்
2.இயேசு பாலனாய் பிறந்தததிசயம்
இது தேவ பக்தியின் இரகசியம்
ஆத்ம இரட்சிப்பு நமக்கு அவசியம்
அவர் இரத்ததால் கிடைக்கும் நிச்சயம்
ஆதி வேத சத்தியம் நம் சாட்சியம்
பரிசுத்த ஜீவியம்
இது நமது இலட்சியம்
பரனோடு வாழுவோமே நித்தியம்
சீரேசு நாமமே ஓங்குமே ஜெயம்
சுவிசேஷ ஊழியம் நம் பாக்கியம்
சீஷராக நாம் மாறுவது சிலாக்கியம்
சமாதானமே சபையின் ஐக்கியம்
சேர்த்திடும் நம்மை தேவராஜ்யம்...
ஆமென்!!!
Comments
Post a Comment